Towards a just, equitable, humane and sustainable society

ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு – பொறையூர்பேட்

0
No votes yet
0
Post a comment

தொடக்கம்

ஒவ்வொரு மாணவனும் தன் சுற்றுப்புறத்தில் உள்ள இயற்கை-செயற்கை வளங்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவற்றைப் பாதுகாக்கத் தன்னால் இயன்றதை செய்ய முயல வேண்டும் என்பது சூழ்நிலையியலின் குறிக்கோள்களில் ஒன்று.  இதன் தொடர்பாக, எம் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள ஏரிக்குக் களப்பயணம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தோம்.

ஊர்ப்புற பறவைகளின் கணக்கெடுப்பை மேற்கொள்ள அஜிம் பிரேம்ஜி  நிறுவனத்தின் வழிகாட்டுதலை நாடினோம். அதற்குத் தேவையான உபகரணங்களுடன் இரு பறவை ஆர்வலர்கள் வந்து பறவைகளை உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பிற்காக எம்பள்ளி மாணவர்களை முன் ஆயத்தப்படுத்தினர். பின்னர் மாணவர்கள் பள்ளி அருகில் உள்ள பறவைகளை உற்றுநோக்க ஆசிரியர்களுடன் சேர்ந்து உதவினர்.

வகுப்பறையில் உரையாடல்

மாணவ – மாணவிகள் தாங்கள் பார்த்த பறவைகளின் பெயர்களைக் கேட்டறிந்து அதனை எங்கு பார்த்தார்கள் என்பதை பற்றி விவாதித்தல். அது மரம், நிலப்பரப்பு, மின்சார வேலியாக இருக்கலாம். சில பறவைகள் பறந்துகொன்டிருக்கும். அதை பற்றியும் கேட்கலாம். பிறகு அவர்கள் பார்த்த பறவைகளை இருவகையாக பிரித்து – நிறம், அளவுகளைக் கவனிக்கவைத்தல். பெரியது, சிறியது என்று வகைப்படுத்தப்பட்டு அதன் வண்ணத்தில் வாயிலாகக் கண்டுகொள்வதுப் பற்றி உரையாடலாம். கடைசியாக ஒவ்வொரு பறவையையும் உற்றுநோக்கி அதனின் அழகு, கால், வால், இறக்கை என்று உன்னிப்பாக கவனிப்பதுப் பற்றி உரையாடி புரியவைத்தல்.

கள பயணம்

பள்ளியைச் சுற்றியுள்ள பறவைகளான காகம், அண்டங்காகம், கௌதாரி, தேன் சிட்டு, இரட்டைவால் குருவி, ஆகியவற்றை உற்று நோக்கி அவற்றின் அலகுகள், வண்ணம், கால்களின் அமைப்பு, கால்நகங்களின் அமைப்பு, பறவைகளின் எண்ணிக்கை போன்றவற்றை உற்றுநோக்கச் செய்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களும் தங்களின் கையேடுகளில் குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் அஜிம் பிரேம்ஜி  நிறுவனத்தின் வழிகாட்டுனர்களிடமும் கேட்டு தங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

ஊசுடு ஏரி - பார்வையிடல்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுனர்களுடன் பள்ளியிலிருந்து நடைபயணமாக ஊசுடு ஏரியை அடைந்தனர். மீண்டும் அவ்வேரியில் உள்ள பறவைகளுக்கான உற்று நோக்கல் ஆரம்பமானது. ஓவ்வொரு மாணவர்களுக்கும் Binocular( இருகண்  தொலைநோக்கி)  கொடுக்கப்பட்டு, அதன் உதவியோடு ஒவ்வொரு மாணவர்களும் அங்குள்ள பறவைகளை உற்றுநோக்கி மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் பறவைகளின் அமைப்பு, நிறம் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பின்போது பார்த்த பறவைகள்,

  1. அண்டங்காக்கா
  2. காகம்
  3. மைனா
  4. புறா
  5. கௌதாரி
  6. இரட்டைவால் குருவி
  7. கொக்கு
  8. பாம்புத்தாரா                                                         
  9. தேன்சிட்டு
  10. நீர்காகம்
  11. குருட்டுக்கொக்கு
  12. மீன்கொத்தி
  13. சிட்டுக்குருவி

மாணவர்களில் ஒரு சிலர் முன் வந்து தாங்கள் குறிப்பெடுத்துக் கொண்ட பறவைகளின் பெயர்களையும், எண்ணிக்கையும் பகிர்ந்து கொண்டனர். மற்ற மாணவர்கள் அதனை தாங்கள் குறிப்பெடுத்த எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப்பார்த்தனர். சுமார் 1 மணி நேரம் இந்த உற்றுநோக்கல் தொடர்ந்தது.

உற்றுநோக்கல் நிறைவு பெறுதல்

பறவைகள் பற்றிய இந்த விவாதம் ஊசுடு ஏரியில் நிறைவு பெற்றது. பின்பு, நாங்கள் அனைவரும் நடைபயணமாக பள்ளியை அடைந்தோம். வண்ண வண்ண பறவைகளின் வளமான உற்றுநோக்கல் எங்கள் மாணவர்களை மகிழ்வித்தது. அந்த மகிழ்விற்கான நன்றியை அஜிம் பிரேம்ஜி நிறுவனத்திற்கும் அதன் வழிகாட்டுனர்களுக்கும் எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இரா. பிருந்தாவதி

தொ ப ஆ, அ தொ ப பொறையூர்பேட்

birdwatching, birds,evs

Grade: 
3, 4, 5

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment