Towards a just, equitable, humane and sustainable society

கல்வியின் விடுதலை

0
No votes yet
0
Post a comment

அரவிந்த்குப்தா  

“ஒரு நாள், ஒரு வகுப்புக்கு வர வேண்டிய ஆசிரியர் வரவில்லை. ஆசிரியர் வரவில்லையெனில், குழந்தைகள் குழந்தைகளாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தது என்னைப் பெரிதும் பாதித்துவிட்டது” என்கிறார் அரவிந்த் குப்தா. ‘யார் இந்த அரவிந்த் குப்தா?’ காந்தியின் கல்வி குறித்த கொள்கைகளை உள்ளுணர்ந்தவர். 

தளர்வில்லாமல் கேள்விகளை எழுப்புவதும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையும் கல்வி கற்றலின் ‘அடிப்படைத் தேவைகள்’. கல்வியின் நோக்கம், நமது வளங்களைக் கொள்ளையிடும் மேலாதிக்கச் சக்திகளுக்கு உதவுவதாக இல்லாமல், நாட்டின் கடைநிலையில் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். ‘எழுதப் படிக்கும் திறன் மட்டுமே கல்வியல்ல. அடிப்படைக் கல்விக்குப் பின், மனிதக் கரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வியும் தரப்பட வேண்டும்’ போன்றவை காந்தியின் நயீ தலீம்(ஆதாரக் கல்வி) கொள்கைகள். 

ஆனால், விடுதலைக்குப்பின் கல்விமுறை மாறிப்போனது. செயல்முறைக் கல்வியை விடுத்து ஏட்டுக்கல்வி எங்கும் பின்பற்றப்பட்டது. சிந்தித்தலைவிட மனப்பாடமுறை ஊறிப்போனது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீது வன்முறையால் திணிக்கப்பட்டது. வேலை அல்லது தொழிலுக்கான சுங்கச்சீட்டாக மட்டுமே மாறிப்போனது.

அரவிந்த் குப்தா தான் பணிபுரிந்து கொண்டிருந்த தனியார் நிறுவனத்திலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, மத்தியபிரதேசத்தில் ஒரு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான அறிவியல் பொம்மைகளைச் செய்ய முற்பட்டார். சைக்கிளின் வால் ட்யூப்பையும் தீக்குச்சியையும் வைத்துக்கொண்டு கணித வடிவங்கள், வேதியியல் மூலக்கூறு அமைப்புகள், வீடுகள், கட்டுமானங்கள் குழந்தைகளே செய்து, அறிந்துகொள்ளுமாறு பயிற்றுவித்தார். இந்நாட்களில் அவர் சமூகத்தில் கண்ட வறுமையும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அவரை மிகவும் பாதித்தன. காந்தியும், கார்ல் மார்க்சும் அவர் மனதில் ஆழப்பதிந்தனர். ‘தீக்குச்சி மாதிரிகளும் மற்ற அறிவியல் பரிசோதனைகளும்’ என்ற புத்தகத்தை அவர் எழுத, அது 12 மொழிகளில் வெளியானது. ‘தரங்க்’(சிற்றலைகள்) என்னும் தலைப்பில், 25 வருடங்களில், 125 நிகழ்ச்சிகளைத் தயாரித்து, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக வழங்கியிருக்கிறார். இதனால் பள்ளி மாணவர்களிடையே எளிமையான அறிவியல் பரிசோதனைகளை அவர் கொண்டு செல்ல முடிந்தது. இந்தப் பரிசோதனையில் நம்மைச் சுற்றியிருக்கும் கழிவுப்பொருட்கள், தீக்குச்சிகள், சைக்கிள் வால் ட்யூப்கள், உறிஞ்சி குழாய்கள்(Straw),   பேட்டரிகளைப் பயன்படுத்தினார். YouTube-ல் இவரின் 8600 பரிசோதனை காணொளிகள்  உள்ளன. 

அரவிந்த் குப்தாவின் மிக முக்கியமான பங்களிப்பு, அறிவியலைச் சாதாரணமான ஒரு விசயமாக்குவது, ஒரு விளையாட்டாக மாற்றுவது. தெருவில் கிடக்கும் குப்பையில் அறிவியலைத் தேடுவது/தேடச் செய்வது. உதாரணத்திற்கு, செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் மங்கள்யான் என்னும் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் ஒரு ராக்கெட்டைக் காணொளியில் காணும் ஒரு ஊரகச் சிறுமி, அதன் வடிவத்தைக் கண்டு வியப்புற/மிரள வாய்ப்புள்ளது. ஒரு பலூன் மூலம் விளையாட்டான பரிசோதனையாக மாற்றும் பொழுது, பிரமிப்பு விலகி, அதன் ஆதார அறிவியல் உண்மைகளை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைத் தான் காந்தி ‘கரங்களின்(ஆதார) கல்வி’ என்கிறார். அதையே செயல்முறைப்படுத்தினார்.

  1. காந்தியின் கொள்கைகளை அர்விந்த் குப்தா பயன்படுத்தியது போன்ற அனுபவங்கள் உங்களுக்கு ஏதேனும் உண்டா?
  2. காந்தியின் கல்வி குறித்த வேறு ஏதேனும் கொள்கைகள் பற்றி நீங்கள் அறிந்தவற்றை உங்கள் வகுப்பறை அனுபவத்துடன் விளக்கவும்.

‘இன்றைய காந்திகள்’ என்னும் இப்புத்தகம் தங்களின் வாசிப்பிற்காகக் காத்திருக்கிறது. தொடர்புக்கு எங்களுடைய ஏதேனும் ஒரு கல்விவள மையத்தை(Educational Resource Center) அணுகவும்.

Grade: 
3, 4, 5, 6, 7, 8

Term:

Subject: 
EVS, Primary Maths, Science

0
No votes yet
0
Post a comment

Comments

Admin's picture
Admin

Learning by doing is a valid point. Knowing scientific things using waste known simple materials is good thing. I am going to try Aravid Gupta experiments and try those experiments in the school with children.

Maheswari K

GPS KT Kuppam pet

Admin's picture
Admin

செயல்வழிக்கல்விமுறை...அறிவியல் என்பது ஆய்வகங்களில் மட்டுமல்ல நம்மை சுற்றி இருக்கும் சாதாரண பொருட்கள் மூலமாகவும் விளக்கமுடியும் என்னும் கருத்தை அரவிந்த் குப்தா பின்பற்றினார்... விளையாட்டு பொருட்கள் மூலமாகவும் கல்வி கற்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார் அறிவியல் கருத்துக்களை விளக்க.. அவர் பல விளையாட்டு பொம்மைகளை உருவாக்கியுள்ளார்..

மாணவர்கள் அனைவரும் ஒரு கைத்தொழிலை கற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை என்னை ஈர்த்தது

பயமில்லா கல்வி முறையை

Vasanthi

GHS Sellipet

 
Admin's picture
Admin

காந்திய கொள்கைகளுல் நான் சுய ஒழுக்கம் மற்றும் நேர்மறை நடத்தை மாற்றங்கள் குறித்து வலியுறுத்துவது உண்டு.

கல்வியில் ஆர்வமின்றி மற்ற பிள்ளைகளையும் தொந்தரவு செய்த மாணவர்கள் , முறையான நடத்தை மாற்றத்திற்குப் பின் ஆர்வத்துடன் கற்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். சக மாணவர்களைத் துன்புறுத்தும் பையனும் பொறுப்பானவனாக மாறினான். கல்வியின் மீது ஆர்வம் தானாக வந்தது. இவை எனது வகுப்பில் நான் மேற்கொண்ட முயற்சிகள்

Hema saraswathy

GPS Poraiyurpet