Towards a just, equitable, humane and sustainable society

அரசு நடுநிலைப் பள்ளியின் ஓராண்டு கல்விப்பயணம்(2017-18)

புதுவை மாநிலம் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்கதும் புதுவைப் பகுதிகளுக்குக் குடிநீரை வழங்கி வருகின்ற ஊரான முத்தரையர் பாளையத்தில் அமைந்துள்ள எம் பள்ளி அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி ஆகும். 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுற்றிலும் பசுமையான மரங்கள் சூழ்ந்த இப்பள்ளியில் 10,000 ச. அடி கொண்ட விளையாட்டு மைதானம்,சிறந்த நூலகம் மற்றும் கணினி அறைகள் உண்டு.

ஊராரின் ஒத்துழைப்போடும், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் திறம் வாய்ந்த ஆசிரியர்கள்,சீரிய தலைமையாசிரியரின் கீழ் எம் பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

விடுதலைத் திருநாளன்று மரம் நடுதல்.

மாணவர்களைக் கல்வியில் ஈடுபடுத்த, இப்பள்ளியில் மாதந்தோரும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 2017-2018 கல்வியாண்டில் நடைபெற்ற சில நிகழ்வுகளை இங்கே கூற விழைகிறேன். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு துறைகளிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று நினைவுப் பரிசுகள் வழங்கி விழாவைச் சிறப்பித்தனர். அவர்களுள் முன்னாள் தலைமையாசிரியர்களான திரு. பாஸ்கரன், திரு. ராஜேந்திரன், திரு,காசிநாதன் ,முன்னாள் முதல்வர் திரு. ரங்கசாமி ,“ஓவியரத்னா” பாரதிவாணர்  சிவா, வட்டம் –I மற்றும் வட்டம் –II பள்ளித் துணை ஆய்வாளர்கள் திருமதி. ஜெயசெல்வி, திருமதி.  மல்லிகா கோபால் ஆகியோர்  அடங்குவர்.

ஜூன் :இக்கல்வியாண்டின் புதுவகுப்பு புகுவிழா நடைபெற்றது. முதல் பருவத்திற்குரிய பாடநூல்கள் மற்றும் எழுதுபொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஜூலை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள்  ‘மாணவர் தினமாக’ கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட்: சுதந்திர தின  நாள் “இன்னர் வீல் கிளப்” சார்பில் கொண்டாடப்பட்டது. கடைசி வாரத்தில் அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சி நடைபெற்றது. அதில் நூறுக்கும் மேற்பட்ட  படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

செப்டம்பர்: செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. .

அக்டோபர்: இரு வாரங்களிலும் தூய்மை இந்தியா வாரம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி வளாகத் தூய்மைப்பணி, உறுதி மொழி எடுத்தல், வினாடி வினாப் போட்டி , ஓவியப்போட்டி உட்பட பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை  வழங்கப்பட்டது. புதுவை பாரதி பல்கலைப் பேரவை சார்பில் 43-வது “சிறுவர் இலக்கியச் சிறப்பு”  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தத்தம் படைப்புகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சுழற்கேடயங்களும் வழங்கப்பட்டது.

செஞ்சிக்கு கல்விச் சுற்றுலா சென்றபொழுது

நவம்பர்:குழந்தைகள் தின விழா நவம்பர் 14 அன்று கொண்டாடப்பட்டது.இதில் மாணவர் அரங்கம் நடைபெற்றது. அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் தம் சொந்தச் செலவில் இனிப்பும், பேனாவும் வழங்கி தனது குடும்பத்துடன் கொண்டாடினார்.

டிசம்பர்: மரு. விக்னேஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய  மாணவி சங்கீதாவிற்குக் காது கேட்கும் கருவியை வழங்கினார்.

ஜனவரி: ஜனவரி 3 அன்று கல்விக்கண் கொடுத்த பெண்மணி சாவித்ரிபாய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஜனவரி 26 அன்று  குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது.

பிப்ரவரி: அஞ்சலகச் சேமிப்பு முகாம், உலக ஈர தினத்திற்கான ஓவியப்போட்டி, குடற்புழு நீக்கம் மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம்,முத்தரையர்ப்பாளையம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை நடைபெற்றது.கல்விச்சுற்றுலாவில் மாணவர்கள் செஞ்சி, சாத்தனூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தனர். 3,4, 5 வகுப்புகளுக்கான வாசிப்பு மையங்கள் தொடக்கவிழா நடைபெற்றது.

மார்ச் : உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விளையாட்டுப்பிரிவு: கோ-கோ போட்டியில் மாநில அளவிலும், உயரம் தாண்டுதல் போட்டியில்  வட்ட அளவிலும் எமது மாணவர்கள் வென்றுள்ளனர். தேசிய திறனறிவுப் போட்டியிலும் எம் பள்ளி மாணவிகள் சாதனைப் படைத்துள்ளனர்.

இவ்வாறு எம் பள்ளி அனைத்திலும் சிறந்து விளங்கும் இத்தருணத்தில் மதிப்பிற்குரிய தலைமையாசிரியர், அறிவார்ந்த ஆசிரிய பெருமக்கள், திறம் வாய்ந்த மாணவர்கள், மேலும் ஒத்துழைப்பை நல்கிய பள்ளி மேலான்மைக்குழு, ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. ■

Teacher: கு. செந்தில்குமார், அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி, முத்தரையர் பாளையம்.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management