Towards a just, equitable, humane and sustainable society

கற்றலில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) பங்கு

ICT வழி கற்பித்தல் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. தேர்ந்த ஆசிரியர் ICT வழி கற்பிக்கும் பொழுது கற்றல் இனிமையானதாகவும் எளிமையாகவும் நிகழ்கிறது. ICT வழி கற்பித்தலில் சவால்கள் இருப்பினும் அது மாணவர்களைத் தொழில்நுட்ப உலகத்தை எதிர்கொள்ள தயார் செய்கிறது.

அறிமுகம்

கற்பித்தல் என்பது கற்றலில் தாகத்தைத்  தந்து  கற்போர் மனதில் தாக்கத்தை  ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆணி வேராக அமைவது காட்சிப் படுத்துதல், மற்றும் படைத்தல். அதற்குத் தேவையானது தொழில் நுட்ப அறிவு மற்றும் கணினி செயல் பாட்டுத்  திறன். கணினி தொழில் நுட்பம் மாணவர்களின் கற்றலை எளிதாக்கி கற்பித்தலை ஏற்றமுற செய்கின்றது.

மரபு வழி கற்றல் மற்றும் கணினி வழி கற்றல்  ஒப்பீடு :

மரபுவழி கற்றல்

கணினி வழி கற்றல்

குறிப்பிட்ட இடம் தேவைப்படுகிறது.

கற்பிப்பவரின் அறிவு, திறன் பொருத்து கற்றல் அமையும்.

21ம் நூற்றாண்டிற்கான சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை வளர்க்க வாய்ப்பு குறைவு.

சலிப்பு ஏற்படுதல், கவனமின்மை, களைப்பு, கற்றலில் ஆர்வமின்மை ஏற்படலாம்.

காலநேரத்திற்குட்பட்டது

குறிப்பிட்ட இடம் தேவை இல்லை.

கற்பவரின் ஆர்வம், ஆற்றலுக்கேற்ப கற்பித்தல் அமையும்.

சவால்களை எளிதில் எதிர்கொள்ளலாம்.

காணொளி காட்சியாதலால் சோர்வற்று மிக ஆர்வமுடன் கற்றல் கற்பித்தல் நிகழும்.

காலநேரத்திற்கு அப்பாற்பட்டது

ICT வகுப்பறை என்றால் என்ன?

பாடப்பொருளைக் காட்சிப் பொருளாக மாற்றி அமைத்து மனதில் பதியுமாறு செயலிகள்(APP) மற்றும் கணினி தொழில்நுட்பத்தின் மூலம் தெளிவாகக் கற்று தந்து மாணவர்களே சுயமாக உருவாக்கிட ஆயத்தமாக்கும் வகுப்பறை ICT வகுப்பறை ஆகும்.

எனது வகுப்பறையில் ICT செயல்பாடு

என் பள்ளி உடயம்பாளயத்திலுள்ள  கோவை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சுமார் 110  மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.  ICT ஆய்விற்காக எடுத்துக்கொண்ட 7 ஆம் வகுப்பில்  மொத்த மாணவர்கள்  14. ஆய்விற்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் எட்டு பேர். முதல் படியாக மெதுவாகக் கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் ICTபயிற்சி தரப்பட்டது.

இதற்கு ஏதுவாக ஆசிரியர்களுக்குச் சுய பயிற்சி மற்றும் அனுபவம் தேவைப்படுவதால்  கீழ்கண்ட பயிற்சிகளில் கலந்து கொண்டு என்னைத் தயார்ப் படுத்தினேன்.

மேற்கொண்ட பயிற்சிகளின் விவரம்.

கோவை மாவட்டத்தில் ICTக்காக உருவாக்கிய ஆசிரியர்கள் குழுவில்  மாதம் ஒரு முறை அரசு சார்பற்று, தனியார் கல்லூரிகளின் உதவியுடன் பயிற்சியை மேற்கொண்டேன்.

கூகுள் நிறுவனத்தின் மூலம் இணையம்  வழி பயில சிறப்பு அனுமதிப் பெற்று ICT வகுப்பிற்குத் தேவையானப் பயிற்சிகளை மேற்கொண்டேன்.

பயிற்சியில் பெற்ற சான்றிதழ்கள்  மற்றும் பயின்ற பாடப்பிரிவுகள்.

1.     Microsoft Innovative Educator.  (MIE)

2.    Teach creative coding through Games and Apps.

3.    Digital Citizenship and Safety Course.

4.    Virtual Field trips with Skype in the Class room.

5.   Teaching Sustainable Development Course.

மேலும் மாணவர்களுக்குத் தேவையான எளிய   அகராதியை GOOGLE நிறுவனத்தின் அனுமதியுடன் “WORD DUNIA’’ என்ற பெயரில் மாணவர்களின்  பங்களிப்போடு உருவாக்கியுள்ளோம். தினமும் ஒரு மணி நேரம் கற்றல் பணிகளூடே   ICT பயிற்சியையும் நடைமுறைப் படுத்தி வருகிறோம்.

மாணவர்களின் உருவாக்கம் :

கீழ் கண்ட ICT செயலிகளின் மூலம், அனிமேஷன், நழுவங்கள், பேசும் சித்திரங்கள், வீடியோக்கள், மற்றும் பிற காணொளி காட்சிகளையும் உருவாக்கி பள்ளி இணையதளம் மற்றும் YOU TUBE  போன்ற வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் . இது அவர்களுக்கு மட்டும் அல்லாமல் பலருக்கும் உதவக் கூடியதாக உள்ளது.

மாணவர்கள் பயன்படுத்திய செயலிகள் :

 • Power point
 • Photos collage creation
 • Animation/gif/ maker
 • Camtesia - screen recording software
 • Smart teaching kit
 • ICT4tamil/social/ science/maths
 • Speaking pictures tutorials
 • 3d talking videos
 • Tellagami Apps.

மாணவர்களின் சில படைப்புகள் :

அறிவியல் : எலக்ட்ரான்களின் இயக்கம், தனிமங்கள்  மற்றும் அதன் பயன்கள், அணு அமைப்பு, பகல்-இரவு உருவாகுதல், கிரகணங்கள் ஏற்படுதல், தாவரங்களின் செயல்பாடுகள், ஒளிச்சேர்க்கை,  இயக்கம், அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அறிவியல் அகராதி.

ஆசிரியர்களின் பங்கு

The most important thing that schools can do is not to use technology in the curriculum more, but to use it more effectively.

21 ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொண்டு சமுதாயத்தில் வெற்றி கொள்வதற்கு ICT வழி கற்பித்தல் அவசியம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். பல செயலிகளின் பயன்பாட்டை ஆசிரியர்கள் இணையம் வழி அறிதல் அவசியமாகிறது.

சவால்கள்/சிக்கல்கள்

 • மரபு வழி கற்பித்தலிலிருந்து மடிக்கணினி வழி கற்பிப்பதற்கு மனமாற்றம் ஏற்பட சிறிது காலம் தேவைப்படலாம்.
 • சிறந்தப் பயிற்சியாளர்களைக்  கண்டறிதல் கடினம்.
 • மடிக்கணினி, ஆன்ட்ராய்ட் செயலி கொண்ட சாதனங்கள்/tablets தேவைப்படுகிறது.
 • வகுப்பறையில் ப்ரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டு,  skype  போன்ற தொழில் நுட்ப கருவிகள் அவசியமாகின்றன.
 • ஆசிரியர்கள் தங்களது அன்றாட அலுவல்களையும் தாண்டி சிறப்பு நேரம் ஒதுக்கி  கற்பித்தல் வேண்டும்.
 • அனைத்திற்கும்  மேலாக மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் நிறை குறைகளை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

முடிவு/ தீர்மானம்:

நடைமுறைத் திறன்களை எளிதாக வெளிப்படுத்த, பாடங்களுடன் உயிரோட்டத்துடன் உறவாட, படைப்பாற்றலை உருவாக்க, விலைமதிப்பற்ற  நேரத்தையும், பணத்தையும் சேமிக்க,  மேலும் 21 ம் நூற்றாண்டில் மாணவர்கள் சந்திக்கும் சமுதாய சவால்களை எதிர்கொள்ள ICT கல்வியே தீர்வாகும்.   எனவே  ஒவ்வொரு கிராமங்களிலும் அறிமுகப்படுத்துதல் அவசியம். தேவையான செயல் திட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்தி மாணவர்களை  மைய நிகர் உலகத்திற்கு வழி காட்டிட (VIRTUAL WORLD) வேண்டும்.

குறிப்பு :

 • Education in Medias --- D. Buckingham.
 • Use of tablet Technology in the Class room - Goodwin.
 • கணினி வழிகாட்டல் - தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்.    

 

Teacher: ஆனந்த் குமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உடயம்பாளயம், கோவை மாவட்டம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management