Towards a just, equitable, humane and sustainable society

பள்ளி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு

L. ஆரோக்கியராஜ்,, ஊ.ஒ.ந.ப, கோனேரிக்குப்பம்,விழுப்புரம்

சிறப்புக்கூற்று

  1. நோக்கம் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியாவை நமது அரசுபள்ளியின் மாணவர்கள் நாங்கள் எங்கள் பள்ளியில் உருவாக்கிய கலாம் ஆல்பத்தின்,  ஆசிரியர்கள்  இவர்களால் மட்டுமே  நினைவாக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஆழமாய் உணரவைத்து, கனவு இந்தியாவின்  நோக்கத்தோடு பயணிக்க வைத்தோம்.
  2. சமுதாயம் பெருமளவிற்கு பணஉதவி மூலம் பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளில் பங்களித்துள்ளது.
  3. இந்த மாற்றத்தை நடைமுறையில் கொண்டுவர, இப்பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டனர்.
  4. ஒன்றுபட்டால் உண்டு உயர்வும் மாற்றமும் என்பதற்கு இப்பள்ளி ஒரு எடுத்துக்காட்டு.

Dr.APJ.அப்துல் கலாம் ஐயா, அவர்களைப்பற்றிய, விழிப்புணர்வு வீடியோ ஆல்பத்தை ,எனது  சொந்த செலவில் இலட்சிய இந்தியனின்-“ சபதமேற்போமே" என்ற தலைப்பில், சுமார் 85,000 மதிப்பில், விழுப்புரம் மாவட்டம் ஆசிரியர்கள்.,மற்றும் எங்கள் ஒலக்கூர் ஒன்றிய ஆசிரியர்கள் ஆகியோரை ஒன்றிணைத்தும், கோனேரிக்குப்பம் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, அவர்களையும் ஒன்றிணைத்தே ஆல்பம் தயாரித்தோம் , 

Anna University Director திரு.உத்திரியராஜ் அவர்களால் வெளியிட்டோம். இந்த ஆல்பத்தின் நோக்கம் அப்துல் கலாம் கண்ட கனவு. இந்தியாவை நமது அரசுபள்ளியின் மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்கள்  இவர்களால் மட்டுமே  நினைவாக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஆழமாய் உணரவைத்து, கனவு இந்தியாவின்  நோக்கத்தோடு பயணிக்க வைத்தோம்.

கலாம் ஆல்பத்தின் இயல், இசை,இயக்கத்திற்கு நான் பொறுப்பு எடுத்தேன். என்னோடு இணைந்து கலாம் ஆல்பத்தை இயக்கியவர்கள் நமது  மாவட்ட  ஆசிரியர்கள், R.ராஜேஷ், ராஜேஷ்பாரதி  கணபதி, மற்றும் சந்தோஷ்.ஆவர். இந்த ஆல்பம் எங்கள் ஒன்றிய ஆசிரியர்களுக்கு மறுமலர்ச்சியையும், தன்னம்பிக்கையும்  தந்துள்ளது.

2. ஒன்றாம் வகுப்பறையை, கனவு வகுப்பறையாக்கும் நோக்கத்தோடு, மாணவர்களின் விருப்பத்தைக்கேட்டு, அவர்களின் விருப்பத்திற்கு   ஏற்றார்போல்,  வகுப்பறையை  ரூ. 1,70,000 மதிப்பில், நன்கொடையாளர்கள்,  மற்றும் ஊர் மக்கள் இணைந்து , படிப்படியாக மாற்றத்தை, Smart Class-ஐ உருவாக்கியுள்ளோம்.இதன் மூலம் எங்கள் பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிஎடுத்து வருகிறோம்.

3. பாடத்தலைப்பிற்கு ஏற்றார்போல்,பாடக் கருத்துக்களை வீடியோவாக தயாரித்து,

மாணவர்கள், பாடத்தை ஆர்வமோடு கவனித்து, புரிந்துக்கொள்ள, தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி  கற்று தருகிறோம்.

4. தமிழ்,ஆங்கிலம்,கணக்கு பாடப்புத்தகப் பாடலுக்கு , இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, (Keyboard and drums) இசையமைத்து ,மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து, வீடியோக்கள் தயார்செய்து, Whatsup ,மற்றும் Facebook குழுவின் மூலம் தமிழக அளவில் நமது ஆசிரியர்களுக்குப் பகிர்ந்து  வருகிறோம்.ஆங்கில பாடல்களை இந்திய அளவில் சில ஆசிரியர்களுக்குப் பகிர்ந்து வருகிறோம்.இதனை அறிந்த News -18 நமது பள்ளியின் ஆடல் பாடல் கல்வி முறையை, கோப்பியமாக எடுத்து சென்றார்கள்.

5. கலாமின் பெயரில் அறிவியல் மன்றம் உருவாக்கி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை,1 ஆம் மற்றும் 2 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கண்காட்சிகள் வைத்து,அறிவியல்  ஆர்வத்தை முதல்வகுப்பிலிருந்தே ஊக்குவித்து வருகிறோம்.

6. சினிமாவின் தாக்கத்தால்  அழிந்து வருகின்ற, நமது பண்பாட்டு கிராமியக்கலைகளைக்  காப்பதற்காக, எங்கள் பள்ளியில் "மாணவர் கிராமியக் கலைக்குழு" தொடங்கி,எனது சொந்த செலவில் சுமார் ரூ15,000 மதிப்பில்  இசைக்கருவிகளைப் பள்ளிக்காக வாங்கி, நமது பண்பாட்டு கலைகளை எங்கள் பள்ளியில் கற்றுதருகிறோம்.(கரகம்,கும்மி,கோலாட்டம்,

பறையாட்டம்,சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,சக்ககுச்சி, கலியல், குறவன்குறத்தி) இதன்மூலம் பள்ளி விழாக்களில் சினிமா பாடலைத்    தவிர்த்து, நமது நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து, பண்பாட்டு கலைகளை  மீட்டுவருகிறோம். அதுமட்டுமல்ல ,ஒன்றிய பள்ளிகளுக்கும் இக்கலைகளைக் கற்றுதந்து, இசைக்கருவிகளை அவர்களும்  இலவசமாகப் பயன்படுத்தி பயன்பெற துணையாக இருந்துவருகிறோம்.இவற்றை அறிந்த எங்களின் கிராமிய கலைக்குழுவைப்பற்றிய செய்தி தொகுப்பு, " தந்தி " தொலைக்காட்சியில், நம்நாடு நிகழ்ச்சியில்  ஒளிபரப்பு செய்தது . நமது அரசுப்பள்ளிக்கு கிடைத்த பண்பாட்டைக் காக்கும் 

நற்பெயர் இது. இதன்மூலம் கல்லூரிகளில் நமது பள்ளி மாணவர் கிராமிய கலைக்குழுவிற்கு, நிகழ்ச்சி நடத்த அழைப்பு தருகிறார்கள்.

7. ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் மற்றும் மூன்று கிராமத்தில் உள்ள முன்னால் மாணவர்கள் வீட்டிலும் , பழ மரக்கன்றுகள் நட்டு, "புதிய தலைமுறை தொலைக்காட்சி"  நம்மால் முடியும் குழுவோடு இணைந்து ,பசுமையைக் காக்க, சமுதாயப்பணியில் அடிக்கடி இணைந்து வருகிறோம்.இதற்கு முழு ஒத்துழைப்பு தருபவர்கள் மூன்று கிராம இளைஞர்களும் இளம்பெண்களும் தான்.

8 குஜராத்தில் - தேசிய அளவில் நடைபெற்ற  DFC- INDIA, I CAN  செயல்திட்டத்தில் கலந்துகொண்டு,பள்ளிக்குத் துப்புரவு பணியாளர்கள் இல்லாத சூழலைக் கருத்தில் கொண்டு...

மிகப்பெரிய பள்ளி வளாகத்தைப் பெருக்கும் வண்டியைத் தயாரித்து, அதற்காக, இந்திய அளவில் சிறந்த 20 செயல்திட்ட  படைப்பாக தேர்வாகி, DFC INDIA - I CAN AWARD -2016 விருதை வென்று  சாதனைப்படைத்தோம். அதுமட்டுமல்ல top -5 க்கும் Nominated ஆகவும் வந்தோம்.

9 . சுடிதார் அணியும் எட்டாம் வகுப்பு மாணவிகள் சிலர்,ஓடி ஆடி விளையாடுவதற்கும்,

யோகா செய்வதற்கும் சிரமம் படுகிறார்கள். அவர்கள் சுதந்திரமாக ஓடி ஆடி விளையாட,  கோட் தைத்து கொடுத்து பள்ளிக்குவர ஏற்பாடு செய்தோம். இதனால் அவர்களின் சுதந்திரம் குறையாமல் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வர எங்களின் முயற்சி உதவியது.

10. கல்லூரிக்கு இணையாக, சுமார் ரூ5,16,470 மதிப்பில்,  அரசின் தன்னிறைவு திட்டத்தைப் பயன்படுத்தி  ICT- COMPUTER LAB க்கு முயற்சி எடுத்து,மூன்றில் ஒரு பங்கு தொகையானரூ 1,72,157ல் திரு. பாரிவேல் முருகன் முழுமதி அறக்கட்டளை (ஜப்பான்)ரூ 80,000, பள்ளி ஆசிரியர்கள் ரூ30,000,நல்லாத்தூர்,நங்குணம்,கோனேரிக்குப்பம்ஆகிய  

மூன்று கிராம மக்களை  ஒன்றுதிரட்டி ரூ 62,000 பொருளாதார உதவி திரட்டி,  அரசின் தன்னிறைவு திட்டம் மூலம்( SMC -மூலம்) கணினி ஆய்வகம் அமைக்க தேவையான ( Computer -24,Computer tables -24,Chairs -48 ) ஆகியவற்றை வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியரிடம், எங்கள் நிதியை கொடுத்து, Computer lab அமைக்க ஆணையை ரூ5,16,470 மதிப்பிற்கு  பெற்றோம். மேலும் கணினி ஆய்வக அறையை புதுப்பிக்க ரூ2,50,000 மதிப்பில், புதிய மர ஜன்னல்கள் -3,  மரக்கதவு -1, டெயில், பெயிண்ட்,  வாங்க, கோனேரிக்குப்பம்  மண்ணின் மகள்  திருமதி.கலைச்செல்வி யுவராஜ்-USA-  ரூ72,000 வழங்கினர். ஜான்ராஜா [ சௌதி] =  ரூ10,000, வினைத்தீர்தான் HM = ரூ10,000,பாலாஜி குழு IT. = ரூ15,000 கார்த்திகேயன் ஏழுமலை = ரூ35,000.Fr. செல்வம் - AC. வழங்கினர். இவற்றை பயன்படுத்தி கிரில் பாதுகாப்பு பணிகளையும், ஆய்வக அறையைப் புதுப்பிக்கும்  அனைத்து பணிகளையும் செய்து முடித்தோம். விழுப்புரம்

மாவட்டத்தில் ரூ 7,50,000 மதிப்பில், பிரமாண்ட கணினி ஆய்வகம் அமைத்தோம்.

11.   மதில் சுவர் இல்லாத, வளாகத்தில்,  34 அடி நீள  இடத்தை, சிலர் ஆடுமாடுகளைக் கட்டி, பள்ளியின் இடத்தை அபகரித்தனர். Fr,Benjamin- USA, பள்ளி முதல்வர் , திரு.Sam Daniel - little Jacky Mat,Hr,Sec,School பள்ளி முதல்வர்,ஆகிய இவர்களிடம் ரூ 40,000 உதவிகள் பெற்று,  6அடி உயரத்தில் மதில்சுவர் கட்டி முடித்தோம்.

12.  நான்கு அடி உயரத்தில் இருந்த,  30 அடி பள்ளி வளாக சுற்றளவை , 7அடியாக உயர்த்தி கட்டினோம்.

13. மலைமேட்டில் பள்ளி இருந்ததால், எங்கு பார்த்தாலும் பாறைகளாக இருந்தது. JCB வைத்து அந்த கற்களை அகற்றினோம்.

14. பள்ளி வளாகத்தை, நல்ல விளையாட்டு மைதானமாக்க, 20 -TRACTOR வண்டி மண்ணை, பள்ளி வளாகத்தில் கொட்டி,  சமன்செய்தோம்.திரு.யுவராஜ் அவர்கள் மற்றும் கிராம மக்கள் உதவினார்கள்.

15. என்னைப் பற்றிய Article.....The Hindu தமிழ் நாளிதழில், அன்பாசிரியர் -35.பகுதியில் வெளிவந்தது.

16. NEWS -18 ல்,என்னை பற்றியும்,  பாடல் மூலம் கற்பிக்கும் எனது கல்விமுறைப் பற்றியும், இப்படிக்கு நிகழ்வில் கோப்பியமாக வந்தது...

17.  கனவு வகுப்பறைக்குள், டைல்ஸ், 3- புதிய ஜன்னல்கள், வகுப்பறைக்குள் நாடக மேடை, பழைய மின் இணைப்புகள் புதுப்பித்தல்.சுவர் பட்டிப்பார்த்தல், அழகான பெயிண்ட் அடித்தல் போன்ற பணிகளை முடித்துள்ளோம்.

18. Single phase ல் இத்தனை ஆண்டுகளாய் இருந்த பள்ளி,  three phase line ஆக Conversion பெற்று, ரூ20,000 செலவில், Computer lab, Dream class, main line wires அனைத்தையும் புதுப்பித்துள்ளோம். செல்வி.பிரேமகலா -BBC-DELHI உதவியோடு.

19. மே மாத விடுமுறையில், 3நாட்கள் , கிராமியக்கலை பயிற்சி வழங்கினோம்  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்  FR. BENJAMIN - USA அவர்களின் உதவியோடு.

20. South Indian Young Inspiring Teacher Award -2017 June -3 அன்று, எனக்கு  தென்னிந்தியாவின் சிறந்த ஆசிரியர் விருது கிடைத்தது.

21.திரு. சாகுல் ஹமீது - கத்தார். அவர்களின் மூலம் 24,000 மதிப்பில் வகுப்பறைக்கும், மதில் சுவற்றிற்கும் பெயிண்ட் அடித்தோம்.

22. ஐந்தாம் வகுப்பு கட்டிடம் ₹20,000 மதிப்பில் புனரமைத்தோம்.

23.ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் விழாவில் மலைவாழ் மாணவர்கள் 10 பேருக்கு,  கல்வி ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கி வருகிறோம். மதநல்லிணக்கத்தைக் கற்றுதருகிறோம்.

24.பள்ளி கட்டிடம் முழுதும் 50,000 மதிப்பில், அரசுப்பள்ளியைக் காப்போம் இயக்கத்தின் உதவியோடு, வண்ணம் தீட்டினோம்.

25. திறன் வகுப்பறை Smart Class, கணினி ஆய்வகம் Computer lab ஆகியவற்றை, நமது பள்ளிக்கல்வித்துறை செயலர்,  உயர்திரு.த.உதயசந்திரன் அவர்களால், 23.02.2018 அன்று,  திறந்து வைத்தோம். இதுதான் எங்களின் மிகப்பெரிய முயற்சி. 

26. Altius Foundation உதவியோடு, 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினி ஆய்வகம் மூலம்,   கணிதம் நடத்த ஒப்பந்தம் செய்துள்ளோம்.

27. தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமித்து, ஊதியம் வழங்கி, மாணவர்களுக்கு,  திருக்குறள் பயிற்சி அளிக்கிறோம் ரூ 15,000 மதிப்பில்.

28. பழைய கட்டிடங்களைப் புதுப்பித்துள்ளோம்.

 

 

 

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management