Towards a just, equitable, humane and sustainable society

கண்டும் கேட்டும் களிப்போம் !

குழந்தைகளின் திறமைகள் அனைத்தையும் புதைத்து, அவர்களைத் தன் முன்னே கட்டிப்போடும் மாய வித்தைக்காரன் தொலைக்காட்சிப் பெட்டி. அந்த மாயக்காரனிடமிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எவ்வாறு? குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் பசி, தூக்கம், வேலை மறந்து தன்னில் மூழ்கச் செய்யும் வலிமை வாய்ந்தது. குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை, அன்பைப் பகிர்ந்து கொள்ள நேரமில்லை, பாசமும் இல்லை. இந்த மாயவலையில் சிக்காமல் குழந்தைகளைக் காப்பது நம் தலையாய கடமையாகும். அதற்குச் சிறந்த ஒரு வாய்ப்பாக இந்தப் பாடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் ஒரு துளியும் ஐயமில்லை.

பாடநோக்கம்: 

  • தொலைக்காட்சிச் செய்திகள், நிகழ்ச்சிகளில் செலவழிக்கப்படும் நேரத்தை ஆராய்ந்து அறிதல்
  • விளம்பரங்களின் அமைப்பை ஆராய்ந்து தானாக ஒரு விளம்பரத்தை உருவாக்குதல் 
  • விவாதித்தல், கலந்துரையாடுதல், பட்டிமன்றத்தில் பங்கேற்றல் போன்றவற்றின் வாயிலாகத் தன் கருத்துகளை தெளிவாக எடுத்துக் கூறும் திறனை வளர்த்தல் 

 

செயல்பாடு – 1

விளம்பரங்கள் சிலவற்றைச் சேகரித்து அதைப் பற்றித் தத்தம் குழுக்களில் கலந்துரையாடச் செய்தல். பின்னர் பின் வரும் கேள்விகளை முன் வைத்து அதற்கான பதிலைத் தங்கள் குழுக்களில் விவாதித்து விடையளிக்கச் செய்தல்

1. இந்த விளம்பரம் எதைப் பற்றி

2. S. Kamalan, PST , GPS Thengaithittu.யது? 

3. இந்த விளம்பரத்தில் உள்ள பொருள் எந்த அளவிற்கு அவசியமானது?

4. இதற்கு மாற்றான பொருள் நம்மிடம் ஏதேனும் உள்ளதா?

5. இந்தp பொருளை வாங்குவதால் நாம் அடையும் நன்மை/ பாதிப்பு யாவை?

6. இப்பொருளை எத்தனை பேர் விரும்பி வாங்குவார்கள்?ஏன் ?

7. இப்பொருளை நீ வாங்க என்னென்ன முயற்சிகள் செய்வாய்?

குழுவில் விவாதித்த கருத்துக்களைக் குழந்தைகள் கூறும் போது அவற்றைக் கரும்பலகையில் எழுத வேண்டும். இது போன்ற செயல்பாடுகளை அளிக்கும் பொழுது குழந்தை ஒவ்வொரு விளம்பரம் வரும் பொழுதும் இதைப் போன்று சிந்தனை செய்ய நல்ல வாய்ப்பாக அமையும். தொடர்பணியாக அவர்கள் பார்க்கும், படிக்கும் விளம்பரங்களை எடுத்து வரச் செய்து அனைத்தையும் சேகரித்து இது போன்று ஆராய்ந்து பட்டியலிட்டுத் தொகுப்பேடு ஒன்றைத் தயாரிக்கலாம்.

 

செயல்பாடு – 2 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாம் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதை அறிவதற்காக அட்டவணை ஒன்றை உருவாக்கி அதை நிரப்பச் செய்தல். பின் இத்தனை நிகழ்ச்சிகளில் நமக்குப் பயன் தரக் கூடியவை எவை, என்? பயன் தராதவை எவை, ஏன்? போன்ற கேள்விகளை முன் வைத்துக் குழுக்களில் கலந்துரையாடிய பின் ஒவ்வொரு குழுவாகப் பகிர்தல்.  அவ்வாறு அவர்கள் கூறும் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் அவர்களின் கருத்துக்களை பதிவு செய்து அதை பற்றி அனைவருடனும் விவாதித்து நன்மை தீமைகளை உணரச் செய்தல். இதிலிருந்து நாம் கண்ட தீர்வு என்ன என்பதை எழுதி வரைபட தாளில் ஒட்டுதல்.

செயல்பாடு – 3 

தொடர் பணியாக வீட்டில் இருப்பவர், நண்பர்கள் விரும்பிப் பார்ப்பதைப் பட்டியல் செய்து வரச் செய்தல்.

 

 

நிகழ்ச்சியின்

S. Kamalan, PST , GPS Thengaithittu.  பெயர்

பார்ப்பதற்கான காரணம்

நேரம்

அப்பா

 

 

 

அம்மா

 

 

 

தாத்தா

 

 

 

அக்காள்

 

 

 

அண்ணண்

 

 

 

இத்தகைய நிகழ்ச்சிகளை பார்க்க ஒரு நாளைக்கு நாம் செலவிடும் நேரம் குறித்து தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூற வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு/ மாதத்திற்கு/ வருடத்திற்கு எவ்வளவு நேரம் வீணாகிறது என்பதை உணரச் செய்ய வேண்டும். இந்த நேரத்தை எவ்வாறெல்லாம் நல்ல வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை உணரும் வண்ணம் கலந்துரையாடல் சூழலை ஆசிரியர் அமைத்துத் தர வேண்டும். முடிந்தால், பெற்றோருடனும் பேசலாம்.
இதன்மூலம் நல்ல மாறுதல் ஏற்படும். ஒரு வகுப்பு குழந்தைகளிடம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டால் பள்ளியின் அனைத்து வகுப்புக் குழந்தைகளிடமும் செயல்படுத்திக் குழந்தைகளின் நடைமுறையில் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும்.
 

செயல்பாடு – 4 

குழந்தைகள் பார்க்கும் விளம்பரங்களைப் பட்டியல் செய்து (குழுக்களில்) அதைப் பற்றி விவாதித்து உணரச் செய்தல். இங்கு ஆசிரியரின் பணி மிகவும் முக்கியம். ஒரு விளம்பரத்தை எப்படிப் பார்க்க வேண்டும், அதில் ஆராயப்பட வேண்டியவை யாவை, மறைக்கப்பட்ட உண்மைகள் எவை, விளம்பரப் பொருளின் தரம் போன்றவற்றை குழந்தைகள் ஆராய்ந்து உணரும் வண்ணம் கலந்துரையாடல்கள், கேள்விகள் அமைவது முக்கியம்.

 

விளம்பரம்

பயன் என்ன

தீமை என்ன

மாற்று

உடனடி சமோசா

சுவையான உணவு

உணவைப் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள்

வீட்டில் தயாரிப்பது (நேரமானாலும் )

பற்பசை

 

 

 

சூரியகாந்தி எண்ணெய்

 

 

 

 இந்தக் கலந்துரையாடல் மூலம், விளம்பரங்கள் வெறும் வியாபார உத்திகள். அதை நம்பி நாம் பொருள்களை வாங்குவதால் நம் பணமும் விரயமாகிறது, உடல் நலத்திற்கும் தீங்கு நேர்கிறது என்பதைக் குழந்தைகளை உணரச் செய்தல்.    

 

செயல்பாடு – 5 

ஆசிரியர் சில விளம்பரங்கள் சேகரித்துக் கொடுத்துக் குழந்தைகளைப் பின்வரும் வினாக்களுக்கான விடைகளைக் குழுக்களில் கலந்துரையாடச் செய்தல். 

1. விளம்பரம் எதைப் பற்றியது?

2. எதையெல்லாம் பெரிய எழுத்தில் கொடுத்திருகின்றனர்? ஏன்?

3. எதையெல்லாம் தனியே கட்டத்திற்குள் கொடுத்து இருக்கிறார்கள்? ஏன்?

4. வாக்கிய அமைப்பு எப்படி உள்ளது? ஏன்?

5. விளம்பரத்தில் உனக்குப் பிடித்து என்ன? ஏன்?

6. பல்வேறு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஏன்?

7. எங்கெல்லாம் ஒட்டப்படுகிறது?

இந்தச் செயல்பாட்டின் மூலம் குழந்தைகள் விளம்பரம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அறிகின்றனர். இதன் மூலம் அவர்களால் புதிய விளம்பரம் உருவாக்க முடியும். விளம்பரத்தின் தன்மையான, எளிய இரண்டு வரி வாக்கியங்கள், கண்ணை கவரும் வண்ணங்கள், மொழி நடை, அதன் வடிவம் போன்ற அனைத்தையும் பற்றிக் குழந்தைகள் அறிந்து கொள்வர்.
 

 

செயல்பாடு – 6 

குழந்தைகளைக் குழுக்களாகப் பிரித்து சில தலைப்புகளைக் கொடுத்து விளம்பரங்கள் எழுதச் செய்தல். பள்ளியின் மத்திய உணவு, மாணவர் சேர்க்கை, அறிவியல் கண்காட்சி, குழந்தை தின விழா, ஆண்டு விழா, வகுப்பில் அவர்கள் உருவாக்கிய ஒரு கலைப்பொருள் …

கற்றல் வெளிப்பாடுகள்:

இத்தகைய செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகள் கண்டிப்பாகக் குழந்தைகளிடம் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.

  • பேசுதல் – எதையும் தாம் விரும்பிய வண்ணம் வருணனை கலந்து தங்கு தடையின்றிப் பேசுதல்
  • கேட்டல் – தொலைக்காட்சி /வானொலி விளம்பரங்களைக் கேட்டு ஆரய்ந்தறிதல் 
  • படித்தல் – விளம்பரங்களைப் படித்து, நன்மை-தீமைகளைக் கலந்துரையாடுதல் 
  • எழுதுதல் – விளம்பரங்களுக்கேற்ற அமைப்பில் வாக்கியங்களை எழுதுதல்
  • படைப்பாற்றல் – விளம்பரத்தில் படத்திற்குத் தேவையான வண்ணங்களை உரிய இடங்களில் தீட்டுதல், அதைப் பற்றித் தொடர்கள் எழுதுதல்
  • சொற்களஞ்சியம் – புதிய சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல், எழுதுதல்                             

Teachers: சாந்தகுமாரி. மு ,

                  சுமதி. வா,

                  அந்தவான் ஜோசப். இ 

 

 

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 2