Towards a just, equitable, humane and sustainable society

மறையும் பாலைவனச் சோலைகள் - கோவில் காடுகள்

எழுத்து பந்ஜோட் கௌர் (Down to Earth)

மொழிபெயர்ப்பு ஸ்ரீலக்ஷ்மி, ஆ. தொ. ப. ஏம்பலம் 

300 வருடங்களுக்கு முன்பு பரம்பை மரங்களை வெட்டாமல் காப்பாற்றுவதற்காக அமிர்தா தேவி உட்பட 362 பேர் உயிர்த்தியாகம் செய்த இடத்தில் நிற்கும்போது, சற்று சிலிர்த்து தான் போனது அவர்களை எது அப்படித் தூண்டி இருக்கும்.

அந்த முள்மரங்கள், தார் பாலைவனத்தில் மரங்கள் மிகக் குறைவான பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதாரத்திற்கு உதவி இருக்கிறது ; அதன் புரதச் சத்து நிறைந்த சங்கிரியா பழம் பண பயிர் ஆக இருந்திருக்கிறது ;அதன் உதிர்ந்த இலைகள் கூட கால்நடைகளுக்கு பால் நிறைய சுரக்க உதவும் 'இயற்கை உரமாக” அமைந்திருந்திருக்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டுகளில் 'குரு ஜம்பேஷ்வர்’ தலைமையில் வாழ்ந்த 'பிஸ்நாய்ஸ்’ என்ற சமூகத்தினர் மரங்கள் மற்றும் மிருகங்களை பாதுகாத்து வந்தனர். 'ஓரன்ஸ்’ என்று அவர்கள் பெயர் இட்ட இப்பகுதிகளில் இம்மரங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.

1780 ஜோத்துபூரின் அரசர் அபய்சிங் அவர் கட்டும் புதிய அரண்மனைக்குத் தேவையான சுண்ணாம்பு எரிப்பதற்காக இம்மரங்களை வெட்ட ஆட்கள் அனுப்பியபோது தான், கோடாளிக்கும் மரத்திற்கும் நடுவில் நின்று குரல் கொடுத்தார், அமிர்தா தேவி,”ஒரு உயிர் நீத்து இந்த மரம் காக்கபடுமேயானால், அது தர்மமே” என்று. ஆனால் இன்று அங்கே அந்த மரங்கள் இருந்ததற்கான சுவடே இல்லை என்று கூறுகின்றனர் அமைப்பினர். இன்னும் அதிர்ச்சியாக இருப்பது என்னவென்றால் 80% கேஜராலி மக்களுக்கு கோவில் காடுகள் (ஓரான்ஸ்) என்றால் என்ன என்பதே தெரியவில்லை. இவ்விடத்தில் 363 புதர் வகைகளை கொண்டே ‘அமிர்தாதேவி பிஸ்நாய் வாடிகா என்ற பூங்கா' குரு ஜம்பேஷ்வர்க்கு கட்டிய பழைய கோயிலுக்கு பக்கத்தில் நிற்கிறது ஒரு பெரிய நினைவு மண்டபம் மட்டுமே. 

காரணக்கூறுகள்:-

ஜோத்பூர் நகரத்திற்கு மிக அருகாமையில் இருப்பது தான் இந்தக் ‘கோவில் காடுகள்’ அழிவிற்கான முக்கிய காரணம் என்கின்றனர் அமைப்பினர்

பிபாசர் கிராமம்

1998 ஆய்வின்படி நாகாவுரில் உள்ள பிபாசர் கிராமத்தில் இருந்த

ஜாம்போகி ஓரான்

பீபான்ஜி ஓரான்

மகாராஜா கி ஒரான் மற்றும்

அனுமன்ஜி கி ஒரான்

-களில் 60 வகையான மரங்கள், புதர்கள் மற்றும் புற்கள் இருந்தன, ஆனால் அதற்கும் இப்போது கேஜ்ராலி போன்ற நிலைமை தான் என்ற போது மனம் கனத்தது.

சமீபத்திய ஆய்வுகளின் படி 4 ஒரான்கள் 16 மட்டுமே பரவி இருப்பது மிகவும் வேதனைக்கு உரியது. இது கடந்த 20 ஆண்டுகளில் 56 % வீழ்ச்சி ஆகும் இப்படி ஒரு கடுமையான இழிவுக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? 

காரணக்கூறுகள்:-

ஏரி , குளங்கள், கிணறுகள், ஊற்றுகள், புனிதமாக முக்கியமாக காக்கப் படவேண்டிய இந்த பாலைவனத்தில், ஒரு நீர்தேக்கத் தொட்டி கூட இல்லாமல் இருப்பது ஏன்?

பிபான்ஜி ஓரான்:

தையல் தொழில் செய்பவர்களை கொண்ட இச்சமுகத்தினர், ஊரை விட்டு இடம் பெயர்ந்ததால் இப்பொழுது இது வறண்ட பூமியாகக் காட்சி அளிக்கிறது.

அனர்ன்ஜி கி ஓரான்:

அரசு கட்டியிருக்கும் ஒரு பள்ளிகூடம், ஒரு மருத்துவ மையம் அமைந்திருக்கும் ஒரு சாலை இடையே இப்பொழுது இருப்பதோ, கேஜரி, பார்டி மற்றும் சில புற்கள் மட்டுமே.

ஜாம்போஜி ஓரான்:

இந்த ஓரான் மற்ற ஓரான்களைவ விட சற்று மாறுபடுகிறது. கேர்ஜி, பார்டியை தவிர சில குமாத், கன்கேரி மற்றும் ரோஜா, பார்டியை தவிர சில குமாத், கன்கேரி மற்றும் ரோஜா மரங்கள் வனத்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்படுகிறது.

மகாராஜ் கி ஓரான்

இந்த ஓரான் விவசாயத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டாலும் சரியான பராமரிப்பும் தண்ணீர்ப் பாசனமும் இல்லாததால் வறண்டு போவதாகக் கூறுகிறார் மகாராஜ் என்று அழைக்கப்படும் கோயில் பூசாரி, பிஸ்நாய் சமூகத்தை சேர்ந்தவர். 

பிஸ்நாய் தோல்வியா?

பிஸ்நாய் கழகத்தினர் இயற்கையை காப்பாற்றுவதில் தோல்வி உற்றனரா என்ற கேள்விக்கு விடையளிக்காமல் நழுவி ABBM அலுவலகத்தைக் கை காட்டினார். அங்கு செயலாளராக பணிபுரியும் அனுமன் சிங் கூறிய பதிலில் இருந்த தொணியைக் கேட்டு கொஞ்சம் நரம்புங்கள் புடைக்கத்தான் செய்தன 'ஆம்’ இது எங்கள் இனத்தின் மிகப் பெரிய தோல்வி தான் எங்கள் குரு பிறந்த ஊரில் இருக்கும் ஓரான்களை பாதுகாக்க முடியாமல் போனது வருந்தம் தான். என்றார்.

மணல் குவாரி:

மகாராஜ் கி ஓரான் யில் இருக்கும் ஜெய்சல்சர் மணல் குவாரியில் பணியாற்றும் கிரிதரி சிங்கை சந்தித்தோம். “இதை நாங்கள் வாழ்க்கையாக செய்கிறோம். இதை எங்கள் சேத் பிகானரிடம் கொடுப்போம், அவர் அதை பில்டர்களிடம் (Builders) விற்று விடுவார் இந்த ஓரான்கள் தனியாருக்கு சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்று தெளிவாக தெரியாததால் இந்த ஓரான்கள் அழிக்கப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை”, என்றார்.

அமன்சிங் கிராபலிஸ் என்ற அமைப்பு செய்த கணக்கெடுப்பின் படி மாவட்டங்களில் 25,000 ஓரான்கள் இருப்பதாக ஒரு நூல் வெளியிட்டு இருக்கிறது. வறண்ட காலங்களில் சாப்பாட்டிற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய இந்த ஓரான்களை பாதுகாக்கக் கமிட்டிகளும் குழுக்களும் அமைத்தது அரசு, ஆனால் அரசு இன்று வரை எதுவும் செய்யப்படவில்லை என்கிறது.

'விவசாயம் மற்றும் வருவாய்த் துறையும் தலையிட்டுக் கணக்கெடுக்க வேண்டும் என்று கூறுகிறார் வனத்துறை அதிகாரி” GV ரெட்டி 'ஆனால் அப்பொழுது கூட இந்த ஓரான்களை பாதுகாக்க முடியாது, ஏனெனில் அதற்கான சட்டங்கள் எதுவும் இல்லை” என்றார் சட்டங்கள் இருந்தால் மட்டும் செய்துவிடுவோமோ அல்லது சட்டங்கள் தேவைதானா என்ற கேள்வி கேட்கத் தோன்றுகிறது. 

மூடநம்பிக்கை வென்றது.

பாபுஜி கிராமத்தில் 2715 ha அமைந்துள்ள இந்த ஓரான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது 'Sacred Groves of Rajasthan' புத்தகத்தின் எழுத்தாளர் ஆன G. சிங் கூறுகையில்

“இனம் மற்றும் ஜாதி மீது நம்பிக்கை அதிகம் இருக்கும் இந்த ஓரான்களில் 14 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு மரம் கூட வெட்டப்படவேயில்லை” என்றார். முன்னாள் தலைவர் துளசி சிங் கூறியதாவது இங்கு 1000 ஆண்டு பழமையான மரங்கள் உள்ளன. இங்கு ஓரான்களில் இருந்து எந்த பொருளும் தயாரிக்கப்படுவதுமில்லை, விற்பதும் இல்லை, உபயோகப்படுத்தபடுவதுமில்லை மற்றும் ஒரு எழுபதாட்டையார் கூறும் போது, யாரேனும் மரம் வெட்டினால் அபராதம் விதிக்கப்படும், கடுமையான தண்டனைகள் ஊர் மக்கள் முன்னிலையில் கொடுக்கப்படும். ஆனால் அதையும் தாண்டி எங்கள் குழு பாபு ஜியின் ஆத்மாவாக இம்மரங்களை காத்து வருகிறார், இம்மரங்களை வெட்டு பவர்களை குடும்பத்துடன் அழிப்பதாகவும் நம்புகிறோம். என்றார்.

சில நேரங்களில் இது போல முட நம்பிக்கைகள் சரிதான் என்று தோன்றுகிறது. ஒரு வேளை ஓவ்வொரு முட நம்பிக்கையின் பின்னாலும் ஒரு சமூக அக்கறை இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது. 

Subject: 
EVS

Term: Term 1